Online Pension Applications: நவம்பர் முதல் ஓய்வூதிய விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Online Pension Applications: நவம்பர் முதல் ஓய்வூதிய விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: October 25, 2026 at 1:53 pm
சென்னை, அக்.25, 2026: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விண்ணப்பங்களை வரும் நவம்பர் 2026 முதல் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை ஓய்வூதிய விண்ணப்பங்களை நேரடியாகக் காகித வடிவிலும், ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்க அனுமதி இருந்தது. ஆனால், இரு முறைகளிலும் பெறப்படும் விண்ணப்பங்களின் விவரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு, அவற்றைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இதனைத் தவிர்க்கும் வகையில், இனி அனைத்து புதிய ஓய்வூதிய விண்ணப்பங்களும், திருத்தப்பட்ட ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களும் OPPAS எனப்படும் இணையவழி ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆதார ஆவணங்களையும் இணைக்க வேண்டும். நவம்பர் முதல் நேரடியாகக் காகித வடிவில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது.. தொல். திருமாவளவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com