Landslide in Nilgiris: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டிக்குச் சுற்றுலா வந்த கேரள மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
Landslide in Nilgiris: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டிக்குச் சுற்றுலா வந்த கேரள மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

Published on: October 24, 2026 at 5:49 pm
நீலகிரி, அக். 24 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டிக்குச் சுற்றுலா வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கயிறுகளின் உதவியுடன் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.
கனமழையால் பர்லியார் அருகே குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்ற அரசுப் பேருந்து மீது மரங்களும் மண்ணும் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் பேருந்து கடுமையாகச் சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடத்துநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பர்லியாரில் 250 மி.மீ., கீழ் கோத்தகிரியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் மலைப்பாதைகளில் 19 இடங்களில் மண்சரிவும், 18 இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவங்களும் பதிவாகின. இதனால் ஊட்டி–குன்னூர்–மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி–மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் ஆறு வட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. நெல்லையில் பீகார் ஆசிரியர் அதிரடி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com