Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ்.
Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ்.

Published on: October 23, 2026 at 12:07 pm
டோக்கியோ, அக்.23, 2026: ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான T44/T62/T64 பிரிவு நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் தர்மராஜ் சோலைராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் முந்தைய போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தையும் அவர் தக்கவைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான சொலையராஜ், தனது இரண்டாவது முயற்சியில் 7.15 மீட்டர் தூரம் தாண்டி புதிய ஆசிய சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனை அவருக்கு முதலிடத்தைப் பெற்றுத் தந்தது.
மலேசிய வீரர் எட்டி பெர்னார்ட் 6.34 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் யுமா தமாகி 6.89 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஆசிய சாதனையையும் முறியடித்துள்ள தர்மராஜ் சொலையராஜின் சாதனை இந்திய பாரா தடகளத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரு தங்கம்.. புதிய சாதனை படைத்த நிஷாத் குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com