‘வெற்றி 150’ திட்டம்: ரூ.100 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு.. முழு விவரம்

Vetri 150 Scheme : ‘வெற்றி 150’ திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

Published on: October 21, 2026 at 10:56 am

சென்னை, அக்.21, 2026: தமிழகத்தில் கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ‘வெற்றி 150’ திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 150 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் (VB-G RAM G) கீழ், கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திய தகுதியுள்ள குடும்பங்களுக்கு, தமிழக அரசு தனது நிதியில் இருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க உள்ளது.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின குடும்பங்கள் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் பாரம்பரிய வனவாசிக் குடும்பங்களும் இதில் அடங்குவர்.

2026-27 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்து இந்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், கூடுதல் வேலைவாய்ப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இருப்பினும், கூடுதலான 25 நாட்கள் வேலைவாய்ப்பு அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் பொதுவாக வழங்கப்படாது; அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க : சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு ரூ.5.14 லட்சம் சம்பளம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com