IIT Madras Job Vacancy: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும்.
IIT Madras Job Vacancy: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும்.

Published on: October 20, 2026 at 2:02 pm
Updated on: October 20, 2026 at 2:03 pm
சென்னை, அக்.20, 2026: சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி. மெட்ராஸின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில், திட்ட உதவியாளர் (Project Associate) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), AI மற்றும் மெஷின் லேர்னிங் (AIML), கணினி அறிவியல் (CSE), மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் (ECE), மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல் (EEE) ஆகிய துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.32,000 சம்பளமாக வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கல்வித் தகுதி மற்றும் தேர்வு நடைமுறை தொடர்பான முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஐ.ஐ.டி. மெட்ராஸின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளமான https://icandsr.iitm.ac.in/careers/ மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20, 2026. எனவே, தகுதியுள்ளவர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு ரூ.5.14 லட்சம் சம்பளம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com