Nirmal Kumar: எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Nirmal Kumar: எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published on: October 15, 2026 at 10:39 am
சென்னை, அக்.15, 2026: தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு எதிராக அதிமுக சார்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்பில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, தருமபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி அதிமுகவைத் தனது தனிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், தனது சொத்துகள் மற்றும் குடும்ப நலன்களைப் பாதுகாப்பதற்காகக் கட்சியைப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவை ஒரு பெயரளவிலான அமைப்பாக மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகள் ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியானதாகவும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் கருத்துகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கருத்துகளைத் திரும்பப் பெறுவதுடன், பொதுவெளியில் விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 கோடி இழப்பீட்டை வழங்கத் தவறினால் சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க : சிறுமி தற்கொலை வழக்கில் தொழிலதிபர் வீரமணி கைது.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com