Lijomol Jose: நடிகை லிஜோமோள் ஜோஸ், தான் நடித்துள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் வெற்றிக்கும், தனக்கு ஆதரவு அளித்த படக்குழுவினருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Lijomol Jose: நடிகை லிஜோமோள் ஜோஸ், தான் நடித்துள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் வெற்றிக்கும், தனக்கு ஆதரவு அளித்த படக்குழுவினருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Published on: October 10, 2026 at 2:06 pm
சென்னை, அக்.10, 2026: நடிகை லிஜோமோள் ஜோஸ், தான் நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றிக்கும், தனக்கு ஆதரவு அளித்த படக்குழுவினருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இப்படத்தில் கண்ணியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நன்றிப் பதிவில், சில திரைப்படங்கள் நினைவுகளை மட்டுமல்லாமல் அழகான அனுபவங்களையும், சிறந்த மனிதர்களின் அறிமுகத்தையும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், ‘பத்தா’ திரைப்படம் தன்னுடைய திரைப்பயணத்தில் எப்போதும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் என்றும், இப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரனை முதலில் குறிப்பிட்டுப் பாராட்டிய லிஜோமோள், கண்ணியம்மா கதாபாத்திரத்தில் தன்னை நம்பித் தேர்வு செய்ததற்கும், தெளிவாகவும் பொறுமையாகவும் வழிகாட்டியதற்கும் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கதையை நம்பி தயாரித்த அட்லீ, பிரியா அட்லீ, முராத் கெதானி உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கும், 1980-களின் இசைச் சூழலை அழகாக மீட்டெடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சாய் பிரித்விராஜ், சஹஸ்ரா உள்ளிட்ட சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்புக் குழுவினர், கலை இயக்குநர்கள், சுவரொட்டி வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது திரைப்பயணத்தில் தொடர்ந்து துணையாக இருந்த சசிகலா வெங்கடேஷுக்கும் லிஜோமோள் ஜோஸ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்து ஆதரவளித்த அவருடைய நட்பு தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை ‘பத்தா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்காதவர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பலரது இதயங்களைச் சென்றடைய வேண்டிய அழகான கதை இப்படத்தில் இருப்பதாகவும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் படத்திற்கு மேலும் பலரைச் சென்றடைய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 1980-களின் பின்னணியில் அமைந்த கதையையும் இசையையும் கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : ‘சட்டமும் நீதியும்’ வெப்தொடர் 2வது பாகம் ஒ.டி.டி. தளத்தில் வெளியீடு.. செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com