ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஐமேக்ஸ் திரையில் வெளியீடு.. எகிறும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Jailer 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Published on: October 8, 2026 at 6:52 pm

சென்னை, அக்.8, 2026: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (சி.பி.எஃப்.சி) இப்படத்திற்கு யூ.ஏ 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தின் மொத்த ஓட்ட நேரம் 165 நிமிடங்கள் 18 விநாடிகள், அதாவது சுமார் 2 மணி 45 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா, விநாயகன் உள்ளிட்டோர் தொடர்ச்சியிலும் இடம்பெறுகின்றனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடிப்பது டிரெய்லர் மூலம் உறுதியாகியுள்ளது. புதிய நடிகர்கள் வரிசையில் எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, ரஜினிகாந்த் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் திரைகளிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அவரது திரையுலகப் பயணத்தில் இத்தகைய அளவில் ஐமேக்ஸ் வெளியீடு பெறும் முதல் படம் இதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும் ஆர். நிர்மல் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் மற்றும் ஓட்ட நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அக்டோபர் 15 வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க : அனுபமா, ‘கிரேஸி கல்யாணம்’.. அக்.16 தியேட்டரில் வெளியீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com