Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Fog in Delhi: டெல்லியில் இன்றும் நாளையும் குளிர் அலை வீசக்கூடும் எனவும், காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பனிமூட்டம் நிலவும் எனவும் இந்திய…
Amit Shah: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்….
Kuldeep Singh Sengar bail: உன்னோவ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க முன்னாள் நிர்வாகி குல்தீப் சிங் சேங்கருக்கு பிணை அளிக்க சி.பி.ஐ…
Delhi Traffic Police : 2026 புத்தாண்டை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி போக்குவரத்து போலீஸ் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்….
Droupadi Murmu: சாந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்….
Vande Bharat Sleeper for AC class passengers: ஏ.சி பயணிகளுக்கான முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது என ரயில்வே அமைச்சகம்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்