Mammootty: டோரதி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மம்முட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Mammootty: டோரதி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மம்முட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Published on: October 4, 2026 at 2:09 pm
சென்னை, அக்.4, 2026: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது கார்த்திக் சுப்பராஜின் 10-வது இயக்கப் படமாகும். கனடாவின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
‘டோரதி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் மம்முட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படத்தின் முன்னணி நடிகர்களான சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து மம்முட்டியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ், படத்திற்கான வாழ்த்துகள், நேரம் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மம்முட்டி எப்போதும் தங்களுக்கு உத்வேகம் அளிப்பவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘டோரதி’ திரைப்படம் கிராமப்புற வாழ்க்கை, நட்பு மற்றும் சமூகச் சூழலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் குழந்தைப் பருவ நண்பர்களாக நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை எஸ்.திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்; கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். மம்முட்டியின் பாராட்டுக்கு கார்த்திக் சுப்பராஜ் நன்றி தெரிவித்துள்ள சம்பவம் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : சிக்மா படத்தில் ரஜினியின் பாட்ஷா கதாபாத்திர பெயர்.. ஜேசன் சஞ்சய் ருசிகர தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com