ஆசிய விளையாட்டு மல்யுத்தம்.. தங்கம் வென்ற சுஜித்!

Sujeet Kalkal: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஜீத் கல்கல் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

Published on: October 3, 2026 at 12:43 pm

டோக்கியோ, அக்.3, 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஜீத் கல்கல் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் குடியேவ் 9-2 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், சுஜீத் அடுத்தடுத்து 8 புள்ளிகளைப் பெற்று 10-9 என்ற கணக்கில் பரபரப்பான வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் இந்தப் பிரிவில் தனது முதல் ஆசிய விளையாட்டு தங்கத்தை சுஜீத் கைப்பற்றினார்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக சுஜீத், காலிறுதியில் ஈரானின் அப்பாஸ் இப்ராஹிம்சாதேவை 10-0 என்ற தொழில்நுட்ப மேன்மையில் வீழ்த்தினார். அரையிறுதியில் பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பானின் கொட்டாரோ கியூகாவை 3-3 என்ற கணக்கில் சமன் செய்து, அதிக புள்ளி பெற்ற நகர்வின் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். ஆப்கானிஸ்தானின் சயீத் ஓமர் ஜசாயையும் 13-3 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, இந்திய வீராங்கனை தீபான்ஷி போகத் மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தானின் செய்னிப் பயனோவாவிடம் 4-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். முன்னதாக ஜப்பானின் யுயி சுசாகியிடம் தோல்வியடைந்த தீபான்ஷி, ரெப்பேஜ் சுற்றில் கம்போடியாவின் சம்நாங் டிட்டை 10-0 என வீழ்த்தி வெண்கலப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் இறுதியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இதையும் படிங்க : 44 ஆண்டுக்கு பின் திரும்பிய வரலாறு.. ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் அணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com