பேஸ்புக் பதிவுக்காக மரண தண்டனை விதிப்பு.. சவுதியில் தமிழர் உயிருக்கு அச்சுறுத்தல்!

Saudi Arabia: இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை அருகே நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற சிவராஜன் அனோஜன் சவுதி அரேபியா நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.

Published on: September 27, 2026 at 2:32 pm

ஜெட்டா, செப்.27, 2026: இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை அருகே நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற சிவராஜன் அனோஜன், சவுதி அரேபியாவில் பேஸ்புக் பதிவொன்று தொடர்பான வழக்கில் மரண தண்டனையை எதிர்கொண்டு வருகிறார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு அனோஜனுக்கு உதவ வேண்டும் என இந்து முன்னணி, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் மனு அளித்ததுடன், இந்திய அரசும் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது. சவுதி நாட்டின் சைபர் குற்றச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சவுதி தரப்பு மேல்முறையீடு செய்தது.

அந்த மேல்முறையீட்டின் முடிவில், முன்பு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், அனோஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னர், சவுதி தரப்பும் மேல்முறையீடு செய்து தண்டனையை அதிகரிக்க கோரியதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பாக இலங்கை அரசு சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, செப்டம்பர் 21-ம் தேதி அனோஜனின் பெற்றோரை சந்தித்து, சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், சவுதி மன்னரிடம் மன்னிப்பு கோரும் முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனோஜனின் வழக்கு தொடர்பாக இலங்கையின் பல பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள், பிரார்த்தனைகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம், சென்னையில் மனு அளித்துள்ள இந்து முன்னணி, இந்திய அரசின் தலையீட்டையும் கோரியுள்ளது. சவுதி நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ தீர்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து இலங்கை தரப்பும் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : தென்ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. கர்ப்பிணி உள்பட 11 பேர் படுகொலை!

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு!
Donald Trump

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com