தன்பால் ஈர்ப்புக் காட்சிகள்.. கார்த்திக் சுப்பராஜிடம் ஸ்பெஷல் திறமை.. மணி ரத்னம் பாராட்டு!

Dorothy: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டொரொத்தி’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

Published on: September 27, 2026 at 12:20 pm

சென்னை, செப்.27, 2026: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டொரொத்தி’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரு நண்பர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான வழக்கமான கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு, படத்தில் இடம்பெற்றுள்ள LGBTQIA+ கருப்பொருள்கள் வித்தியாசமான அனுபவமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘டொரொத்தி’ திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். படக்குழு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ பதிவில் பேசிய மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜை மிகவும் தனித்துவமான திறமை கொண்ட இயக்குநர் என பாராட்டியுள்ளார். மேலும், தற்போது பல இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய புதிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இருப்பதாகவும், அவர்களில் கார்த்திக் சுப்பராஜ் முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கார்த்திக் மிகவும், மிகவும் ஸ்பெஷலான திறமை கொண்டவர். நம்மிடம் பல இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய புதிய இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் கார்த்திக் முன்னணியில் இருக்கிறார். ‘டொரொத்தி’ மிகவும் ஸ்பெஷலான படம்” என மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், திரைப்படத்தின் கதை மற்றும் உருவாக்க முறைக்கு அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படத்தின் திரைமொழி, காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியையும் மணிரத்னம் வெகுவாகப் பாராட்டியுள்ளார். படத்தின் காட்சிகள் மற்றும் அவற்றை கையாளும் விதம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்த அவர், “திரைப்படத்தின் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. காட்சிகள், தொழில்நுட்பம் என அனைத்தும் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளன. இதைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார். குறிப்பாக கார்த்திக் சுப்பராஜின் இயக்குநர் திறமை குறித்து மணிரத்னத்தின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

இளையராஜாவின் இசையையும் மணிரத்னம் பாராட்டியுள்ளார். இசை மிகவும் சிறப்பானதாக இருப்பதாக தெரிவித்த அவர், ‘டொரொத்தி’ படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ‘இருவர்’, ‘நாயகன்’, ‘தளபதி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய மணிரத்னம், சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன் 1’, ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜின் புதிய படத்தை அவர் வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டிரிபிள் செஞ்சூரி அடித்த ஹனுமான் அன்ஷ்.. 50 நாள் கலெக்ஷன் ரிப்போட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com