பயில்வான் ரங்கநாதனுக்கு வாய்ப்பூட்டு.. நீதிமன்றத்தில் வென்று காட்டிய திவ்யா சத்யராஜ்!

Court Injunction : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிக்கு எதிராக அவதூறு பேசக்கூடாது என பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: September 25, 2026 at 7:15 pm

சென்னை, செப்.25, 2026: திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருமணம் குறித்து திவ்யா சத்யராஜ் அளித்த பேட்டியில், திருமணம் செய்து கொண்டதற்காக மட்டும் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதில்லை என்றும், காதல் மற்றும் அன்பின் அடிப்படையிலேயே ஒன்றாக வாழ்வதாகவும் கூறியிருந்தார். மேலும், மதம் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையிலான திருமணங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டி தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் தன்னை அவதூறாக விமர்சித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்ததாகக் கூறி, ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி திவ்யா சத்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் திவ்யா சத்யராஜ் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திவ்யா சத்யராஜுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என கூகுள், பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க : ரூ.46 கோடி காசோலை புகார்.. விசாரணைக்கு ஆஜரான நடிகை ராதா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com