Gold Price Today: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.1,14,155-ஐ எட்டியுள்ளது.
Gold Price Today: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.1,14,155-ஐ எட்டியுள்ளது.

Published on: September 18, 2026 at 12:03 pm
சென்னை, செப். 18 2026: சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை சீரற்ற முறையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த நிலையில், இன்று வர்த்தகத் தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதால், நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.113,240 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.145 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,155 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில நாட்களின் நிலவரத்தைப் பார்க்கும்போது, நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,065-க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றைய தினம் சவரன் ரூ.1,12,080 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,010 ஆகவும் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உச்சத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 15,442 க்கும் சவரன் ரூ. 123,536 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை உயர்வு
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி அல்லது சரிவில் இருந்த வெள்ளி விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000 (ரூ.2 லட்சத்து 55 ஆயிரம்)-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரென்டோமோஜோ IPO வெளியீடு.. செப்டம்பர் 17 பங்குச்சந்தையில் பட்டியல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com