Stalin Election Case : கொளத்தூரில் மு.க ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stalin Election Case : கொளத்தூரில் மு.க ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published on: August 31, 2026 at 4:37 pm
சென்னை, ஆக.31, 2026: சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. 17வது சட்டமன்ற தேர்தலில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ். பாபு, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனை எதிர்த்து ஸ்டாலின் தரப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும், வி.எஸ். பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
வழக்கு விசாரணையில் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “45 நாட்கள் கழித்து தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தாமதமாக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. மனுதாரர் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது” என வாதிட்டார்.
மறுபுறம், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர முடியாது. தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு கோளாறுகள் இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டது. 14 இயந்திரங்கள் பழுதாகவில்லை” என தெரிவித்தார். மேலும், 2025ஆம் ஆண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
வி.எஸ். பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “45 நாட்கள் கடந்த நிலையில் ஏன் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிடவில்லை. வழக்கில் யாருக்கும் நோட்டீஸும் அனுப்பப்படவில்லை” என கேள்வி எழுப்பினர். இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு அனுமதி அளித்து, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : கள்ளச்சாராய மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்வு.. தமிழ்நாடு அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com