நிவின் பாலியின்’பெத்லகேம் குடும்ப யூனிட்’ மெகா ஹிட்.. திரும்பி பார்த்த மலையாள திரையுலகம்!

Bethlehem Kudumba Unit: ‘கலிஃபா’வை விட ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படமே ஓணம் பண்டிகையின் வெற்றியாளர் என ரசிகர்கள் கொண்டாட்டுகின்றனர்.

Published on: August 21, 2026 at 9:12 pm

திருவனந்தபுரம், ஆக.21, 2026: ஓணம் பண்டிகை வெளியீடுகளில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பிரேமலு’ இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடித்த இப்படம், சமூக ஊடகங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘கலிஃபா’ கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்ற நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஓணம் வெற்றியாளராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. “நிவின்-மமிதா ஜோடி அழகாக இருக்கிறது, நகைச்சுவை காட்சிகள் நன்றாக வேலை செய்துள்ளன” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு விமர்சகர், “கிரீஷ் ஏ.டி மீண்டும் சினிமாவை நேசிக்க வைக்கிறார். இந்த ஆண்டில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம் இதுதான்” என்று பாராட்டினார். பலர், இது கிரீஷின் இதுவரை வந்த படங்களில் சிறந்ததாகக் கூறியுள்ளனர்.

சிலர், நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’வை விட ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். “மமிதா மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன” என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

மொத்தத்தில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஓணம் பண்டிகையின் வெற்றியாளராக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக பாராட்டப்படுகிறது.

இதையும் படிங்க : நடிகை கரீனா கபூர் 3வது முறையாக கர்ப்பம்? தீயாய் பரவும் வீடியோ

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com