Prof Jawahirullah | செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றுதலுக்கு உரியது என பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Prof Jawahirullah | செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றுதலுக்கு உரியது என பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Published on: September 26, 2024 at 6:37 pm
Prof Jawahirullah | “அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்டிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது.
வழக்கு விசாரணை தொடங்காமலேயே 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மனத் தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார்.
இனி வரும் நாட்கள் மீண்டும் மக்கள் சேவையைத் தொடங்க மனப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26, 2024) ஜாமின் வழங்கியது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க செந்தில் பாலாஜிக்கு பிணை; சிறப்பான தீர்ப்பு: கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com