Vande Mataram : வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது; இது ஏன்? முதல் இரு பத்திகள் மற்றும் பிற நான்கு பத்திகள் எதை குறிக்கின்றன.
Vande Mataram : வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது; இது ஏன்? முதல் இரு பத்திகள் மற்றும் பிற நான்கு பத்திகள் எதை குறிக்கின்றன.

Published on: August 21, 2026 at 5:54 pm
புதுடெல்லி, ஆக.21, 2026: காங்கிரஸ், ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகளையே பாடும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்களின் ஆலோசனையுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடைமுறை தொடர்கிறது. மற்ற நான்கு பத்திகள் மதச்சார்பான காட்சிகளை உள்ளடக்கியதால், அவை சர்ச்சைக்குரியவையாகக் கருதப்பட்டன.
வந்தே மாதரம் பாடலின் தோற்றம்
பாங்கிம் சந்திர சட்டோபாத்யாய் 1875-இல் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். 1881-இல் வெளியான அவரது ‘ஆனந்தமத்’ நாவலில் இந்தப் பாடல் இடம்பெற்றது. இந்நிலையில், 1905-08 காலப்பகுதியில் நடந்த சுவதேசி இயக்கத்தில் பாடல் பெரும் புகழ் பெற்றது.
1937 காங்கிரஸ் தீர்மானம்
இந்த நிலையில், அக்டோபர் 1937-இல், காங்கிரஸ் பணிக்குழு (CWC), பாடலின் முதல் இரண்டு பத்திகளையே தேசிய நிகழ்வுகளில் பாட வேண்டும் என்று தீர்மானித்தது. இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூர் தனது கடிதத்தில், முதல் இரண்டு பத்திகள் நாட்டின் இயற்கை அழகையும் தாய்மையின் பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன; ஆனால் பிற பத்திகள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார்.
முதல் இரண்டு பத்திகள்
முதல் இரண்டு பத்திகள், நாட்டின் நீர், பசுமை, வளம், அழகு ஆகியவற்றை புகழ்ந்து பாடுகின்றன. தாய்நாட்டின் மீது அன்பும் பக்தியும் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பிற நான்கு பத்திகள் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற இந்து தெய்வங்களைப் புகழ்ந்து பாடுகின்றன. தாய்நாட்டை தெய்வமாகக் கருதி வணங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், முஸ்லிம் லீக் மற்றும் சில தலைவர்கள், “தாயை வணங்குவது விக்ரஹாராதனை” எனக் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போதைய சர்ச்சை
2026-இல் பாராளுமன்றம், ‘வந்தே மாதரம்’ பாடலைத் தடுக்கும் அல்லது இடையூறு செய்யும் செயல்களை குற்றமாக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. மத்திய அரசு, அனைத்து ஆறு பத்திகளையும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பாட வேண்டும் என்ற வழிகாட்டுதலை வெளியிட்டது. ஆனால் காங்கிரஸ், 1937 தீர்மானத்தை மேற்கோள் காட்டி, முதல் இரண்டு பத்திகளையே பாடும் என்ற தனது நிலைப்பாட்டைத் தொடர்கிறது.
அரசியல் தாக்கம்
இந்நிலையில், பாஜக இதை “தேசிய விரோதம்” என்றும், “முஸ்லிம் லீக் போன்று நடப்பது” என்றும் குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் இதை “வரலாற்று தீர்மானம்” என்றும், “காந்தி, நேரு, பட்டேல் ஆகியோரின் நிலைப்பாட்டைத் தொடர்வது” என்றும் விளக்குகிறது.
இதையும் படிங்க : காதல், இழப்பு, அரசியல்.. பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது ஏன்? சோனியா காந்தி சுயசரிதை சொல்வது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com