Pregnant women: கர்ப்பிணி பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா? இது தொடர்பாக தற்போதைய புதிய ஆய்வுகள் சொல்வது என்ன? விரிவாக பார்க்கலாம்.
Pregnant women: கர்ப்பிணி பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா? இது தொடர்பாக தற்போதைய புதிய ஆய்வுகள் சொல்வது என்ன? விரிவாக பார்க்கலாம்.

Published on: August 19, 2026 at 4:41 pm
சென்னை ஆகஸ்ட் 19 2026; கர்ப்பிணிப் பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை உட்கொள்ளலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன; எனினும், குறைந்த எடை குழந்தை பிறப்பு மற்றும் சிசேரியன் பிரசவம் போன்ற அபாயங்கள் இருக்கக்கூடும் என்பதால், ஒவ்வொரு பெண்மணிக்கும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை அவசியம் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
முன்னதாக கர்ப்ப காலத்தில் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள் பற்றிய பழைய கவலை பல ஆண்டுகளாக, கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் இருந்து வந்தது; இதனை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் கர்ப்பிணி பெண்கள், கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் அறிவுறுத்தி வந்தார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், இந்த மருந்துகள் கருவின் வளர்ச்சியை பாதிக்கலாம் என்ற அச்சமே ஆகும். இதனால், உயர் கொலஸ்ட்ரால் இருந்தாலும், பெண்கள் கர்ப்ப காலத்தில் மருந்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
இது தொடர்பாக 21 ஆய்வுகள் வெளியாகி உள்ளன; அதில், 3.1 மில்லியன் கர்ப்பங்கள் குறித்து செய்யப்பட்ட விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள் பயன்படுத்திய பெண்களிடம் பிறவிக் குறைபாடுகள் அதிகரிக்கவில்லை. ஆனால், குறைந்த எடை குழந்தை பிறப்பு மற்றும் சிசேரியன் பிரசவம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இது குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை எண்டோகிரினாலஜிஸ்ட் டாக்டர் சப்தர்ஷி பாட்டாச்சார்யா கூறுகையில், “இந்த ஆய்வு நம்பிக்கையளிக்கிறது. ஆனால், கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை கர்ப்ப காலத்தில் வழக்கமாக பயன்படுத்தக் கூடாது. மேலும், இதயம் சம்பந்தப்பட்ட கடுமையான பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு மட்டும், மருத்துவர் பரிந்துரையின் பேரில் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை தொடரலாம்.
ஏன் தனிப்பட்ட ஆலோசனை அவசியம்?
இது மட்டுமின்றி கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம், இரத்தக் குழாய்கள், கிளாட் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு, கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை நிறுத்துவது கூட ஆபத்தானதாக இருக்கலாம். எனவே, ஒவ்வொரு பெண்மணியின் உடல்நிலை, இதய அபாயம், கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை வைத்து மருத்துவர் முடிவு செய்ய வேண்டும்.
ஆய்வின் முடிவு என்ன?
இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை உட்கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் எதுவும் அதிகரிக்கவில்லை; இதனால், கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள் குறித்து பழைய அச்சம் குறைந்துள்ளது. ஆனால், குறைந்த எடை குழந்தை பிறப்பு மற்றும் சிசேரியன் அபாயம் இருப்பதால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள், தகுதியான மருத்துவர் அல்லது நிபுணர் ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
இதையும் படிங்க; உலகிலேயே முதல்முறையாக, ‘எப்போதும் திறந்திருக்கும்’.. அப்பல்லோ மருத்துவமனை புதிய முயற்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com