“ரோகித் சர்மா, விராத் கோலி துலீப் கோப்பையில் விளையாடாதது நல்லது அல்ல” முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
“ரோகித் சர்மா, விராத் கோலி துலீப் கோப்பையில் விளையாடாதது நல்லது அல்ல” முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
Published on: September 26, 2024 at 12:17 pm
Sanjay Manjrekar | சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில் நட்சத்திர பேட்டர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறாதது இந்திய கிரிக்கெட்டுக்கும், அவர்களுக்கும் நல்லது அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், “விராத் கோலியும், ரோகித் சர்மாவும் துலீப் டிராபியில் ஆடாதது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் விளையாடியிருந்தால் அவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள்.
தொடர்ந்து, “விராட் மற்றும் ரோகித் சர்மா விளையாடாதது (துலீப் டிராபி) இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. ஏன் அந்த இரண்டு வீரர்களுக்கும் கூட நல்லதல்ல” என்றார்.
இந்த நிலையில், “வங்க தேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருவரும் சிறந்து விளையாட வாய்ப்பு உள்ளது” எனவும் மஞ்ரேக்கர் தெரிவித்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஷ்வின் (113 மற்றும் 6/88), ஷுப்மன் கில் (119*), ரிஷப் பந்த் (109) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (4) /50 மற்றும் 1/24) ஆகியோர் இந்தியாவில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள்.
இந்த நிலையில், செப்டம்பர் 27-ம் தேதி கான்பூரில் தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் அதே அணியைத் தக்கவைக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. முதல் டெஸ்டில் வங்க தேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com