Kapildev | “ரவி சாஸ்திரி தனது 32 வயதில் ஓய்வு பெற்றார்; சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை கிரிக்கெட் ஆடினார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை.. ” என கபில்தேவ் பேசியுள்ளார்.

February 17, 2025
Kapildev | “ரவி சாஸ்திரி தனது 32 வயதில் ஓய்வு பெற்றார்; சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை கிரிக்கெட் ஆடினார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை.. ” என கபில்தேவ் பேசியுள்ளார்.
Published on: September 24, 2024 at 11:34 am
Kapildev | 1983 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சிறப்பு கபில்தேவுக்கு உண்டு. இன்றளவும் தமிழ் கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வெல்வதில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கிய பங்காற்றினார்கள். எனினும் இருவராலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிலும் குறிப்பாக 2021 முதல் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திணறி வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிராக சென்னையில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும், ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பெரிதளவு ரன்களை சேர்க்கவில்லை. ரோகித் சர்மா 6,5 ரன்னிலும், விராட் கோலி 6,17 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இது பற்றி பேசிய கபில்தேவ், ” கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை ஒரு வீரரால் 26 வயது முதல் 34 வயது வரை சிறப்பாக செயல்பட முடியும்.
ரவி சாஸ்திரி தனது 32 வயதில் ஓய்வு பெற்றார்; அதே நேரம் சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை கிரிக்கெட் ஆடினார். வயது ஓர் காரணி அல்ல; எனினும் ஒவ்வொரு வீரருக்கும் பிட்னஸ் முக்கியம். இந்த பிட்னஸ் தான் ஒருவரின் விளையாட்டை தீர்மானிக்கும்” என்றார்.
இதையும் படிங்க : முத்தையா முரளிதரனுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரே சொன்ன இரகசியம்!
இதை கவனிச்சிங்களா? சத்தமில்லாமல் சாதித்த ஜடேஜா: தொடப்போகும் சாதனை என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com