TNPSC Group 2 Exam date: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று 821 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 2 Exam date: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று 821 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published on: August 12, 2026 at 4:16 pm
சென்னை, ஆக.12, 2026: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று 821 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி 2 மற்றும் 2A) தேர்வு வரும் நவம்பர் 1, 2026 அன்று நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்கள் இணையவழியில் 11 ஆகஸ்ட் 2026 முதல் 9 செப்டம்பர் 2026 வரை சமர்ப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யூ.பி.ஐ மூலமாகவும் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வில் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளர், வணிகவரித்துறையில் துணை வணிகவரி அதிகாரி, வேலைவாய்ப்புத் துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட 14 பதவிகளில் 41 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அதேபோல், குரூப் 2A தேர்வில் பால்வளத் துறை, கூட்டுறவுத் துறை, அமைச்சகப்பணி, கைத்தறி துறை, இந்து சமய அறநிலையத்துறை, மீன்வளத் துறை, தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்ளிட்ட 44 பதவிகளில் 780 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
கடந்த ஆண்டு 828 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 821 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க : யுஜிசி நெட் தேர்வு உத்தேச விடைக்குறிப்பு எப்போது? வெளியான முதன்மை தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com