சென்னை, ஆக. 10, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று, பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதையும், அவர்களின் உழைப்புக்கேற்ற நியாயமான விலையை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, அரசு கொள்முதல் செய்யும் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை கணிசமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் பேரவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ₹289-ம், பொதுரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ₹150-ம் உயர்த்தப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் இந்த ஊக்கத்தொகை சேரும்போது, விவசாயிகளுக்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹2,750 விலையாகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹2,600 விலையாகவும் நேரடியாகக் கிடைக்கும். நெல் கொள்முதல் வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் ஊக்கத்தொகை இந்த அளவுக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கரும்புக்கான மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் ₹3,290.50 தொகையுடன், தமிழக அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ₹709.50 வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு ₹4,000 வரை விற்பனை விலையாகப் பெறுவார்கள். கரும்பு ஊக்கத்தொகையை இந்த உச்ச நிலைக்கு உயர்த்தியிருப்பதும் தமிழக அரசு நிர்வாகத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சட்டசபையில் உரையை நிறைவு செய்து பேசிய முதலமைச்சர் விஜய், “நமது அரசு விவசாயிகளை எக்காலத்திலும் கைவிட்டுவிடாமல் தோளோடு தோல் கொடுத்து, அவர்களின் ஒவ்வொரு தேவைகளிலும் எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என உறுதியளித்தார்.
நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை அதேபோல, கரும்பு டன் 134க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோல் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்றார்.
மாநிலத்தின் நிதி நிலவரங்களுக்கு மத்தியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளிடையே பெருமகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; TVKவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. எஸ்.பி வேலுமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்