3,323 இந்தியர்களை நாடு கடத்தும் கனடா.. பரபரப்பு தகவல்கள்!

Indians Deported from Canada : கனடா அரசு 3323 இந்தியர்களை, நாடு கடத்தி உள்ளது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: August 9, 2026 at 1:00 pm

ஒட்டவா, ஆகஸ்ட் 9 2026; கனடா 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடுகடத்தியுள்ளது. இது அமெரிக்கா நாடுகடத்திய 1,273 இந்தியர்களை விட மூன்று மடங்கு அதிகம். கனடா தனது குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கி, தற்காலிக குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது.

கனடா எல்லை சேவை அமைப்பு (CBSA) தரவின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரை நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள், 2025 முழுவதும் நாடுகடத்தப்பட்ட 3,779 பேரில் 88% ஆகும். இதனால், 2026ஆம் ஆண்டு புதிய சாதனை உருவாகும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா, 2026 ஜூலை 22 வரை 1,273 இந்தியர்களை நாடுகடத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு அமெரிக்கா 3,567 இந்தியர்களை நாடுகடத்தியது, இது 2011க்குப் பிறகு மிக அதிகமான எண்ணிக்கை.

இந்தியர்கள், 2026 முதல் பாதியில் கனடாவில் அதிகம் நாடுகடத்தப்பட்ட தேசியத்தினராக மாறினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மெக்சிகோ முதலிடத்தில் இருந்த நிலையில், இப்போது இந்தியர்கள் 1,573 மெக்சிகோ குடிமக்களை முந்தினர். 2020ஆம் ஆண்டு 1,424 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டபோது இந்தியா முதலிடத்தில் இருந்தது. பின்னர் எண்ணிக்கை 2021ல் 603, 2022ல் 786, 2023ல் 1,132, 2024ல் 2,004, 2025ல் 3,779 என அதிகரித்தது.

நாடுகடத்தலுக்கான காரணங்களில் குடியேற்ற விதிமுறைகளை மீறுதல், அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, விசா காலாவதியானது, குடியேற்ற மோசடி ஆகியவை அடங்கும். CBSA தனி தரவுத்தளத்தில் காரணங்களை பதிவு செய்தாலும், நாடு வாரியாக விவரங்களை வெளியிடவில்லை. தற்போது 7,669 இந்தியர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் பட்டியலில் உள்ளனர்.

கனடாவின் நாடுகடத்தல் நடைமுறை மூன்று வகை உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படுகிறது: புறப்படுதல் உத்தரவு (30 நாட்களில் தன்னார்வமாக வெளியேற வேண்டும்), அடுத்த உத்தரவில், 1 முதல் 5 ஆண்டுகள் வரை மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும்.

மூன்றாவதாக நாடு கடத்தல் அறிவிப்பு, இதில் நிரந்தர தடை, அரசு அனுமதி இல்லாமல் மீண்டும் நுழைய முடியாது. கனடா தனது குடியேற்றக் கொள்கையை மறுசீரமைத்து, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது. இதேசமயம், அமெரிக்காவும் குடியேற்றக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது.

இந்த நிலை, இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. பஞ்சாபில் மட்டும் 9,000க்கும் மேற்பட்டோர் மசோதா C-12 காரணமாக நாடுகடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இது, இந்தியா-கனடா உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடும்.

இதையும் படிங்க; ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனெய் எப்படி இருக்கிறார்? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com