TN Agriculture Budget 2026 : 30 ஆயிரம் பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் உள்பட தமிழ்நாடு விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
TN Agriculture Budget 2026 : 30 ஆயிரம் பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் உள்பட தமிழ்நாடு விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: August 6, 2026 at 4:32 pm
சென்னை, ஆக.6, 2026: தமிழ்நாடு விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2026-27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். “விவசாயம் செழித்தால் மட்டுமே தமிழ்நாடு செழிக்கும்” என்ற முழக்கத்துடன் தொடங்கிய அவரது உரையில், தடையற்ற இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.841 கோடி, கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5,932 கோடி, நுண்ணீர் பாசனத்திற்காக ரூ.1,168 கோடி என பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
பெண் விவசாயிகள் மற்றும் கிராமப்புற இல்லத்தரசிகளுக்கான சிறப்பு திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 10,000 பெண்களுக்கு உயர் ரக கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி, 100 புதிய மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைக்க ரூ.50 கோடி, இல்லத்தரசிகளுக்கான வீட்டுத் தோட்ட உதவிகளுக்கு ரூ.10 கோடி, 100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்க ரூ.4 கோடி, 30,000 பெண்களுக்கு ஆடுகள் வழங்க ரூ.110 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான “அஞ்சலையம்மாள் விருது” மாநில அளவில் வழங்கப்படும். இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் 5 பேருக்கு “நம்மாழ்வார் விருது” வழங்கப்படும். மேலும், தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ‘நம்மாழ்வார் உயிர்ம வேளாண் கல்லூரி’ தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட்டின் மூலம், தமிழ்நாட்டின் வேளாண்மை முறையை வாழ்வாதாரச் சாகுபடியில் இருந்து நவீன மற்றும் உலகளாவிய வர்த்தகச் சாகுபடியாக மாற்றுவதே அரசின் நோக்கம் என அமைச்சர் வினோத் வலியுறுத்தினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்யவும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : தமிழக அரசு 2026-27 நிதிநிலை அறிக்கை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com