Kangana Ranaut | மீண்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்களுக்கு கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Kangana Ranaut | மீண்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்களுக்கு கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Published on: September 25, 2024 at 3:49 pm
Updated on: September 25, 2024 at 3:52 pm
Kangana Ranaut | பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், “விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” என்ற தனது கருத்துக்களை வாபஸ் பெற்றார். மேலும், “அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் கட்சியின் கருத்துக்கள் இல்லை” என்றும் கூறினார். தொடர்ந்து, “தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24, 2024) மண்டி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அவர், மூன்று பண்ணை சட்டங்கள் சில மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்பை எதிர்கொண்டன என்றார். அப்போது பேசிய அவர், “நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயிகள் பலம் வாய்ந்த தூணாக உள்ளனர். சில மாநிலங்களில் மட்டும் விவசாயச் சட்டங்களை எதிர்க்கின்றனர்.
Do listen to this, I stand with my party regarding Farmers Law. Jai Hind 🇮🇳 pic.twitter.com/wMcc88nlK2
— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2024
விவசாயிகளின் நலன் கருதி விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் கூப்பிய கரங்களுடன் முறையிடுகிறேன்” என்றார். தொடர்ந்து, “நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிறந்த நிதி மற்றும் நிலைத் தன்மையை உறுதி செய்வது அவசியம்” என்றார்.
ஹரியானாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நேரத்தில் கங்கனா ரணாவத்தின் கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கள் பாரதிய ஜனதாவின் கருத்துக்கள் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்த நிலையில் கங்கனா ரணாவத் தனது கருத்துக்களை வாபஸ் பெற்றதுடன், மன்னிப்பும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மார்க்ஸ்சிட் எம்.எல்.ஏ முகேஷ் வழியில்.. கேரளத்தில் பிரபல நடிகர் கைதாகி விடுதலை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com