CWG 2026: கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர் லிப்டிங் பிரிவில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.
CWG 2026: கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர் லிப்டிங் பிரிவில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.

Published on: July 25, 2026 at 3:00 pm
கிளாஸ்கோ, ஜூலை 25 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர் லிப்டிங் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கி வைத்தார்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண்டு குமார், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார். தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையைத் தூக்கி 130.9 புள்ளிகள் பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மூன்றாவது முயற்சியில் 196 கிலோ எடையைத் தூக்கியிருந்தால், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் பதிவான சாதனையை முறியடித்திருப்பார். ஆனால் அந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.
A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the #CWG2026 by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… pic.twitter.com/kMdkU6RRAF
— Narendra Modi (@narendramodi) July 25, 2026
முன்னதாக நடைபெற்ற இலகுரக பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கம் பெறத் தவறினர். ஆண்கள் இலகுரக பிரிவில் அசோக் மாலிக், தனிப்பட்ட சிறந்த சாதனையான 200 கிலோ எடையைத் தூக்கியும் 4-வது இடத்தைப் பிடித்தார். பரம்ஜீத் குமார் 7-வது இடத்தையும், மகளிர் பிரிவில் ஜஸ்ப்ரீத் கவுர் 6-வது இடம், சுமன் தேவி 7-வது இடம் பிடித்தனர். ஹெவிவெயிட் பிரிவில் கஸ்தூரி ராஜாமணி எந்த முயற்சியையும் வெற்றிகரமாகப் பதிவு செய்ய முடியவில்லை.
இளம் வயதில் போலியோ பாதிப்பை வென்று, பொருளாதார சவால்களைத் தாண்டி சர்வதேச அளவில் சாதித்துள்ள ஜாண்டு குமாரின் வெற்றி பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
அவரது சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து, “அவரது வெற்றி அபாரமான திறன், விடாமுயற்சி மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஒழுக்கமான பயிற்சியின் வெளிப்பாடாகும். அனைத்து சவால்களையும் கடந்து சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்” என்று பாராட்டினார்.
இதையும் படிங்க : ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com