ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்

ISSF World Cup: சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.

Published on: July 25, 2026 at 12:44 pm

ஹாங்சோ, ஜூலை 25, 2026: சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

22 வயதான சைன்யம், இறுதிப்போட்டியில் 243.4 புள்ளிகள் பெற்று வலுவான சர்வதேச போட்டியாளர்களை எதிர்கொண்டு 2-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கி வைத்தார்.

அதே பிரிவில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான சுருச்சி இந்தர் சிங் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். எட்டு வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் 137.6 புள்ளிகள் பெற்று அவர் 7-வது இடத்தைப் பிடித்தார்.

இந்த வெற்றி ஹாங்சோ உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு உற்சாகமான தொடக்கத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்க வேட்டையை தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை அனஹத் சிங்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com