ரெயிலில் பயணிகளின் செல்போன்களை பறித்த இளைஞர்… ரெயில்வே போலீஸ் அதிரடி!

Train Theft: சென்னை பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளின் செல்போன்களை திருடி வந்த இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Published on: July 22, 2026 at 11:36 am

சென்னை, ஜூலை 22 2026 : சென்னையில் பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இயங்கும் ரெயில்களில் தனியாக பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து செல்போன்கள் திருடப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது, பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தனியாக இருந்த ரெயில் பயணிகளின் செல்போன்களை சுருட்டி வந்த இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஹரி பாபு (வயது 24) என போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ஹரி பாபு மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஹரி பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் ரெயில்வே போலீசார், இந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு வேறு யாரேனும் உடந்தையாக செயல்பட்டார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க. எம்.எல்.ஏ.. கனிமொழி நேரில் சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com