அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ 2 வது மாநில மாநாடு.. எங்கு தெரியுமா?

WTL Conference: அண்ணாமலை தலைமையிலான ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.

Published on: July 21, 2026 at 1:43 pm

சென்னை, ஜூலை 21, 2026 : அண்ணாமலை தலைமையிலான ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு சென்னை நகரில் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதிலிருந்தும் இயக்கத்தின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு, இயக்கத்தின் அடுத்தகட்ட செயல் திட்டங்களை அறிவிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அண்ணாமலை தலைமையில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12ம் தேதி கோவையில் நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு சென்னை நகரில் நடைபெற உள்ள நிலையில், 2வது மாநில மாநாட்டிற்கான இடம், தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் இயக்கத்தின் எதிர்கால விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த இயக்கத்தின் மூலம் சமூக மாற்றம் மற்றும் மக்கள் பங்கேற்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடைபெறும் இந்த மாநில மாநாடு, அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் குறித்து முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க மார்க்கண்டேயன் சர்ச்சைப் பேச்சு; நடவடிக்கை கோரி அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல்

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com