Minister Viswanathan on Mekedatu : காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம் எனக் கூறிய தமிழக அமைச்சர் விஸ்வநாதன், மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Minister Viswanathan on Mekedatu : காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம் எனக் கூறிய தமிழக அமைச்சர் விஸ்வநாதன், மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: July 20, 2026 at 2:35 pm
திருப்பத்தூர், ஜூலை 20, 2026: திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், வெள்ளி நாணயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டு, கல்வி முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என வலியுறுத்தினார். “காவிரி படுகையிலிருந்து வரும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கே சொந்தம். கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவது மாற்றாந்தாய் போன்றது. தமிழ்நாடு தாயைப் போலக் கொண்டாடும் உரிமை படைத்தது” என அவர் ஆவேசமாகக் கூறினார். மேலும், “மேகதாது அணையில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டேன்” என்றார்.
அவர் தொடர்ந்து, “கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இருப்பினும், கூட்டணி அரசாங்கத்தின் காங்கிரஸ் அமைச்சராக இருந்தாலும், தமிழ்நாட்டின் இறையாண்மை, சுயாட்சி மற்றும் மக்களின் விருப்பமே முக்கியம்” என வலியுறுத்தினார். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும், ஊழல் மற்றும் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் எனவும், ஆனால் மக்கள் நலனுக்கான சிபாரிசுகளை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். சிபாரிசுகள் தனிநபர் சுயநலத்திற்காக இருக்கக் கூடாது; மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும். மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : தி.மு.க எம்.எல்.ஏ அதிரடி கைது.. 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com