Bhagyashri: ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நைஜீரியாவில் சிறுவயதில் கேலி மற்றும் அவமானத்திற்கு ஆளானதாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.
Bhagyashri: ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நைஜீரியாவில் சிறுவயதில் கேலி மற்றும் அவமானத்திற்கு ஆளானதாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.

Published on: July 18, 2026 at 5:41 pm
சென்னை, ஜூலை 18 2026: தெலுங்கு திரைப்படமான ‘லெனின்’ வெற்றிக்குப் பிறகு கவனம் பெற்றுள்ள நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ‘லெனின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
சமீபத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தனது குழந்தைப் பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மகாராஷ்டிராவின் சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில் மராத்தி வழிக் கல்வியில் படித்த பிறகு, தனது தந்தையின் பணிக்காக குடும்பத்துடன் நைஜீரியா சென்றதாகவும், அப்போது தனக்கு ஆங்கிலம் தெரியாததால் கடுமையான அவமானங்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அப்போது எனக்கு மராத்தி, இந்தி மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாததால் அங்கிருந்த இந்திய வம்சாவளி குழந்தைகள் என்னை கேலி செய்யத் தொடங்கினர். அது மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது” என்று பாக்யஸ்ரீ போர்ஸ் கூறினார். ஆனால் அந்த அனுபவமே பின்னர் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறுவயதில் தோற்றம், மொழி, படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு வகையான அவமானங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், எதிர்மறை அனுபவங்களை இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான ஊக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். “அந்த கேலி இல்லையென்றால் இன்று எனது ஆங்கிலம் இவ்வளவு மேம்பட்டிருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் பெற்றுள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், சமீபத்திய ‘லெனின்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல புதிய படங்களில் நடித்து வருகிறார். அவரது குழந்தைப் பருவ அனுபவத்தை பகிர்ந்த இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குடும்பம், காதல், த்ரில்லர்… ஜூலையில் ‘Bullet’ ஓடிடியில் தவறவிடக் கூடாத 4 தமிழ் தொடர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com