IIT Madras certificate courses | 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே ஏ.ஐ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறித்து அறிந்துக்கொள்ளும் வகையில் மெட்ராஜ் ஐ.ஐ.டி புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
IIT Madras certificate courses | 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே ஏ.ஐ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறித்து அறிந்துக்கொள்ளும் வகையில் மெட்ராஜ் ஐ.ஐ.டி புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
Published on: September 23, 2024 at 11:37 pm
IIT Madras certificate courses | சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ‘ஐஐடிஎம் ஸ்கூல் கனெக்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், ‘டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு’ மற்றும் ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ என்ற இரண்டு சான்றிதழ் படிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் படிப்பில் சேர ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான school-connect.study.iitm.ac.in என்பதில் பதிவு செய்துக் கொள்ளலாம். ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இவை, 4 முதல் 8 வார சான்றிதழ் படிப்புகள் ஆகும். இந்தச் சான்றிதழ் படிப்புகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப் படிப்பு ஏற்கனவே செப்.16ஆம் தேதி தொடங்கிவிட்டது. இந்தப் படிப்புகள் அக்டோபர் 4ஆம் தேதி நிறைவடையும். தொடர்ந்து, அக்.21ஆம் தேதி அடுத்த பேட்ச் தொடங்கும்.
இந்தப் படிப்பை முடித்ததும் தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி, 500 பள்ளிகள் ஏற்கனவே ஐஐடிஎம் உடன் கூட்டு சேர்ந்துள்ளன, மேலும் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முந்தைய அமர்வில் பயளடைந்துள்ளனர். இந்தத் தகவலை சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஐ.பி.பி.எஸ் வங்கி அதிகாரி பணி: முதல் நிலை தேர்வு எப்போது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com