Rajendra Arlekar in Kashi Sangamam : தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
Rajendra Arlekar in Kashi Sangamam : தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.

Published on: July 10, 2026 at 8:11 pm
சென்னை, ஜூலை 10, 2026: சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (கவர்னர் பவன்), காசி சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “நமது கலாசாரம் பன்முகத்தன்மை கொண்டது என்று சொல்வதை விட, தனித்துவமானது என்று சொல்லலாம்” எனக் குறிப்பிட்டார். வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்; தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “நானும் தமிழ் கற்று வருகிறேன்” என ஆளுநர் கூறினார். தமிழின் செழுமை மற்றும் அதன் பாரம்பரியத்தை வலியுறுத்திய அவர், மொழி பரிமாற்றம் கலாசார ஒற்றுமைக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், தென்னிந்தியர்களும் வடமொழிகளில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கிடையே கலாசார மற்றும் மொழி பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த உரை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழி மற்றும் கலாசார பரிமாற்றம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாகும் என்பதை ஆளுநர் தனது உரையின் மூலம் வலியுறுத்தினார்.
இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்த மத்திய அரசால் நடத்தப்படும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வு 2025 டிசம்பர் 2 முதல் 15 வரை வாரணாசியில் நடைபெற்றது. “தமிழ் கற்போம் – தமிழ் கார்காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலை மற்றும் மொழிப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோவில், ஸ்கூல், பஸ் ஸ்டாண்ட் அருகாமை டாஸ்மார்க் கடைகளை மூடுக.. அண்ணாமலை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com