கரூர், ஜூலை 10, 2026 : கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். “கரூரில் நடந்த சம்பவம் என் வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணம். அது என் இதயத்தில் இன்னும் ஆறாத காயமாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.
அந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களின் துயரத்தை அரசு ஒருபோதும் மறக்காது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். மேலும், உயிரிழந்தவர்களின் நினைவாக கரூரில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது; நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?. என்று கேள்வி எழுப்பினார். போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே கேன்சல் செய்திருக்கலாம். அந்த இடத்துக்கு கூட்டிட்டு போன நாடகம் இருக்கு பாருங்க. அதை நான் நம்பிட்டேன்.அதனால்தான் கூட்டத்தில் போலீஸுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்” என்று தெரிவித்தார்.
“வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என கூறுவதா?. பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என்று நான் சொல்வேன்.
நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது அது மட்டும் போதாது மக்களே… எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தொகுதி மறுவரையறையை தமிழகம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. வெள்ளை அறிக்கையில் பல தகவல்கள் வெளியானது. ஓட்டை பாத்திரத்தில் நீர் இறைத்துள்ளனர். பாத்திரமும் நிரம்பவில்லை. தண்ணீரும் எங்கே போனது என்று தெரியவில்லை. எத்தனை கோடி ஊழல் நடந்திருக்கிறது என எங்களுக்கே தெரியவில்லை. தோண்ட தோண்ட ஊழல் வருகிறது. மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்.
உச்ச நீதிமன்றம் திமுக வுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தபிறகும் புத்தி வரவில்லை. இன்னும் அவர்கள் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டு நான் எங்கே செல்ல வேண்டும் செல்லக்கூடாது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். நிகழ் உலகத்திற்கு வாருங்கள் திமுக ஆட்சி போய் இப்போது தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கினறது என்றார்.
சட்டசபையில் பார்ட்டி ஃபன்ட் என்று கூறியதும் எந்த கட்சி என்று கூட கூறவில்லை அதற்குள் எடுத்தார்கள் பாருங்கள் ஓட்டம். குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். பேசு பேசு என்கின்றனர் பேசினால் ஓடுகின்றனர். இனி சட்டசபையில் கதவை அடைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்.
அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். “ரீல் அல்ல ரியல் தாய்மாமன்”. இந்த அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணையாக இருக்கும். உங்ககிட்ட யாராவது லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க.. நான் இருக்கேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க நெல்லையில் இரட்டைக் கொலை.. குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்