2.68 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடுதல்.. ரூ.1.93 கோடி ஒதுக்கீடு.. தமிழக பள்ளிக் கல்வித்துறை

Tamil Nadu School Education Department : தமிழக பள்ளிக் கல்வித்துறை 2.68 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிட ரூ.1.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published on: July 10, 2026 at 12:22 pm

சென்னை, ஜூலை 10, 2026: தமிழக கல்வித்துறை, உடற்கல்வி ஆசிரியர்களுக்காக புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்காக 2.68 லட்சம் பாடப்புத்தகங்களை அச்சிட ரூ.1.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் வழங்கப்படவுள்ளன. ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் மாணவர்களின் உடற்கல்வி கற்றலுக்கு உதவுவதற்காக இந்த நூல்கள் பிரத்யேகமாக அச்சிடப்படுகின்றன.

கல்வித்துறை தனது உத்தரவில், இந்த நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்படுவதாகவும், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் உடற்கல்வி பாடங்களை எளிதாக கற்றுக்கொள்ளும் சூழல் உருவாகும்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித் துறை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com