நீங்க பட்டதாரி இளைஞரா? வங்கி வேலை ரெடி.. உடனே விண்ணப்பிங்க!

BOI Recruitment 2026: பேங்க் ஆஃப் இந்தியா, உதவி மேலாளர் நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published on: July 1, 2026 at 12:29 pm

சென்னை, ஜூலை 01, 2026: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, உதவி மேலாளர் நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 779 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20 ஜூலை 2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

SMGS-IV நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்கள் 41 உள்ளன. இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயது வரம்பு 32 முதல் 45 ஆண்டுகள். சம்பளம் ரூ. 1,02,300 முதல் ரூ. 1,20,940 வரை வழங்கப்படும். MMGS-III நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்கள் 61 உள்ளன. இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயது வரம்பு 28 முதல் 38 ஆண்டுகள். சம்பளம் ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280 வரை வழங்கப்படும்.

MMGS-II நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்கள் 677 உள்ளன. இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயது வரம்பு 25 முதல் 32 ஆண்டுகள். சம்பளம் ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை வழங்கப்படும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளமான https://bankofindia.bank.in/career/ என்ற பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 850. எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 170. விண்ணப்பிக்க கடைசி தேதி 20 ஜூலை 2026. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு முக்கியமான வாய்ப்பாகும்.

இதையும் படிங்க : தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி.. இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. போட்டுடைத்த காதர் மொகிதீன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com