Sonam Wangchuk Hunger Strike : டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வான்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.
Sonam Wangchuk Hunger Strike : டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வான்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.

Published on: June 30, 2026 at 10:04 pm
புதுடெல்லி, ஜூன் 30, 2026: டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வான்சுக் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். அவர், NEET தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 28, 2026 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளார்.
போராட்டத்தின் பின்னணி
காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அப்ஜீத் டிப்கே தலைமையில் ஜூன் 20, 2026 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கான பொறுப்புணர்வை மத்திய அரசு ஏற்பது ஆகும்.
வான்சுக் உண்ணாவிரதம்
இந்த நிலையில், ஜூன் 28, 2026 அன்று வான்சுக் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது, அவர், “கல்வி என்பது கடந்த 40 ஆண்டுகளாக என் இதயத்திற்கு அருகில் உள்ளது. மாணவர்கள் குரல் கொடுக்கும்போது நான் அமைதியாக இருக்க முடியாது” என்று கூறினார்.
உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன், வான்சுக் மற்றும் அப்ஜீத் டிப்கே ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஆல் இந்தியா ஸ்டூடன்ட்ஸ் அசோசியேஷன் (AISA) உறுப்பினர்கள் வான்சுக்குடன் இணைந்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். இதற்கிடையில், சில விவசாயத் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முயன்றபோது, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் போலீசார் அவர்களை வீட்டிலேயே தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் போராட்டம் 3வது நாளாக இன்றும் (ஜூன் 30, 2026) தொடர்ந்தது.
இதையும் படிங்க : 1990-இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை.. யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com