அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுப்பு.. கனிமொழி!

Kanimozhi : அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: June 29, 2026 at 3:47 pm

சென்னை, ஜூன் 29, 2026: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தமிழக வெற்றிக் கழக அரசு மீது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, திமுகவினரை அராஜகமாக கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பொது இடத்தில் போதைப் பொருள் போல் பயன்படுத்துவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் மீது விசாரணை நடத்தாமல், அதற்கு எதிராக போராட்டம் செய்யும் திமுகவினரை கைது செய்வது ஜனநாயக சக்தியை அடக்க முயற்சியாகும். தங்களை ஜனநாயக சக்தி என்று சொல்லிக் கொள்ளும் தமிழக வெற்றிக்கழக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது” எனக் கனிமொழி குற்றம் சாட்டினார்.

மேலும், கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய அளவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால், தமிழக அரசியலில் போதைப் பொருள் பிரச்சினை மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவகாரங்கள் மீண்டும் தீவிரமாக பேசப்படுகின்றன.

இதையும் படிங்க : தமிழக அரசியலில் பரபரப்பு.. கரூர் எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com