Lifestyle | மலச்சிக்கலை போக்கும் காய்கறிகள் நீர் ஆகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
Lifestyle | மலச்சிக்கலை போக்கும் காய்கறிகள் நீர் ஆகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 22, 2024 at 7:18 am
Lifestyle | மலச்சிக்கல் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட டாக்டர் தீப்தி ஜம்மி தெரிவித்த சில ஆரோக்கியமான வழிமுறைகளை பார்க்கலாம்.
தண்ணீர்
மலச்சிக்கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அதாவது 250 ml அளவு கிளாசில் குடிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறையும் உணவு அருந்தும் முன்னரும் உணவு அருந்திய பின்னரும் தண்ணீர் குடிப்பதன் மூலம் 6 கிளாஸ் தண்ணீரை எளிதாக குடிக்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் குடிக்கும் தண்ணீர் ஆனது வெதுவெதுப்பாக இளம் சூட்டில் இருக்க வேண்டும். தண்ணீர் உடலில் செரிமான செயல்முறையை எளிமையாக்குகிறது.
நீர்ச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்கள்
மலச்சிக்கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக நீர்ச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. தர்பூசணி, ஆரஞ்சு, கொய்யா மற்றும் பெரிஸ் வகைகள் அதாவது ஸ்ட்ராபெரி, ரஸ்பெரி, நெல்லிக்காய் போன்ற பழங்களில் அதிகமான வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்ரி ப்ராசஸ் அதாவது வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதற்கும் கெட்ட பாக்டீரியாக்களை குறைப்பதற்கும் விட்டமின் சி உதவுகிறது.
மேலும் திராட்சை மற்றும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் ஏற்பட்டவர்களுக்கு உகந்த காய்கறிகளில் முட்டைகோஸ் அடங்கியுள்ளது அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கீரை கடைசலாகவோ அல்லது கூட்டாகவோ உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது உணவு செரிமான செயல்முறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கீரை வகைகளில் முக்கியமான, எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளடக்கிய முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டார்ச் உணவுகளை குறைத்தல்
பொதுவாக உணவில் சேர்த்துக் கொள்ளும் உருளைக்கிழங்கு போன்றவைகளில் அதிக ஸ்டார்ச் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ள கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் ஸ்டார்ச் நிறைந்த உணவு பொருள்கள் செரிமானத்தை குறைவுபடுத்தும்.
தானியங்கள் மற்றும் கொட்டை வகைகள்
பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டை வகைகளில் 3 அல்லது 4 எண்ணிக்கையை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் உண்டு வருவது மிகவும் சிறந்தது. இதேபோல் உலர் திராட்சையையும் ஊறவைத்து சாப்பிடலாம். தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
தயிர்
மலச்சிக்கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் தயிருடன் நீர் சேர்த்து மோர் பதத்தில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை தரும். மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் மலச்சிக்கலை குணப்படுத்தலாம்.
இதையும் படிங்க : பெண்களை பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்னை: தீர்வு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com