Anbumani Ramadoss : அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை சரிவு கண்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss : அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை சரிவு கண்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: June 25, 2026 at 11:07 am
சென்னை, ஜூன் 25, 2026: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 43% இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் தவமாய் தவம் கிடந்த நிலையில், மீண்டும், மீண்டும் அழைத்தாலும் மாணவர்கள் சேர மறுக்கும் நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு அரசின் உயர்க்கல்வித் துறையின் கீழ் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 26,959 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மே 6&ஆம் தேதி வெளியிடப்பட்டு, மே 7&ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மே 29&ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு கல்லூரிகளில் சேர 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5&ஆம் தேதி முதல் 18&ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில் வெறும் 71,502 இடங்கள், அதாவது 56.32% இடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 43.68%, அதாவது 55,457 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் தான், அரசு கல்லூரிகள் மீதான மாணவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அவர்களில் 5 பேர் மட்டுமே இதுவரை நியமிக்கப்படுள்ளனர். இதேநிலை நீடித்தால் அரசு கல்லூரிகளின் கல்வித்தரம் மேகும் வீழ்ச்சியடைந்து விடும்.
அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அதன் மூலம் அரசு கலைக் கல்லூரிகளின் கல்வித் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கல்லூரி மாணவிக்கு தொல்லை.. பஸ் கண்டக்டர் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com