TN Debt Hits ₹13.18 Lakh Crore : தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடன் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்பது முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
TN Debt Hits ₹13.18 Lakh Crore : தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடன் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்பது முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

Published on: June 17, 2026 at 1:45 pm
சென்னை, ஜுன் 17 2026: த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிலையில், நேற்று மாலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக கடன் அளவு உயர்ந்துள்ளது.
கடன் உயர்வு
வருவாய் பற்றாக்குறை மற்றும் வட்டி செலவுகள்
வருவாய் வசூல் குறைவு
நிபுணர்கள் எச்சரிக்கை
மாநில அரசின் வருவாயில் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சவால்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரிப்பு மூலம் கடன் சுமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மாநிலம் இந்த கடன் சுமையிலிருந்து மீண்டு பொருளாதார நிலைத்தன்மையை எவ்வாறு உறுதி செய்யும் என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க ₹75,000 பயிர் கடன்கள் முழுமையான தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com