தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு குட் நியூஸ்… இன்றைய நிலைவரம் தெரியுமா?

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 30 குறைந்து விற்பனையாகிறது.

Published on: June 17, 2026 at 12:19 pm

சென்னை, ஜுன் 17 2026: தங்கம் விலை இன்று புதன்கிழமை (ஜூன் 17) சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து நகை வாங்குபவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,12,240 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமக்கு ரூ.30 குறைந்து ரூ.14,030 ஆக உள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவையைப் பொறுத்து தங்கத்தின் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

முன்னதாக, ஜூன் 16-ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,12,480 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.14,060 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 15,305 க்கும் ஒரு சவரன் ரூ. 122,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 275க்கும் ஒரு சவரன் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யபடுகிறது.

இதையும் படிங்க சற்றே உயர்ந்த இந்திய ரூபாய்.. பின்னணி என்ன? முழு விவரம்

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை SpaceX Tops Amazon

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com