பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு: உரையின்போது மாணவர்கள் வாக்அவுட்

Protest Against Sundar Pichai : அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உரையாற்றியபோது மாணவர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published on: June 16, 2026 at 11:21 am

கலிபோர்னியா, ஜுன் 16 2026: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்றார். விழாவில் சுந்தர் பிச்சை உரையாற்றும்பொது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள், கூகுள் நிறுவனத்தின் பல்வேறு கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப துறையில் பிச்சை எடுத்த முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக, இஸ்ரேல் அரசுடன் கூகுள் நிறுவனத்திற்கு உள்ள “ப்ராஜெக்ட் நிம்பஸ்” எனப்படும் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

சுந்தர் பிச்சை மேடையில் உரையை தொடங்கிய உடன், சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து வெளியேறியதுடன், பாலஸ்தீன கொடிகளை ஏந்தி “ப்ரீ பாலஸ்தீன்” என முழக்கமிட்டனர். இதன் மூலம் கூகுளின் செயல்பாடுகளுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், மாணவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தனது உரையைத் தொடர்ந்த சுந்தர் பிச்சை, உலகம் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்றும், கடினமான விஷயங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் பட்டம் பெறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். போராட்டம் குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அங்கீகாரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com