Theni student death : தேனி பெரியக்குளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு அதிக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
Theni student death : தேனி பெரியக்குளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு அதிக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

Published on: June 13, 2026 at 8:38 pm
தேனி, ஜூன் 13, 2026: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி, காய்ச்சல் ஏற்பட்டபோதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூன் 10ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவிக்கு பிற்பகல் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை வலிப்பு ஏற்பட்டபோதும், தண்ணீர் கொடுத்து வகுப்பறையிலேயே ஓய்வெடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. பிற்பகல் 3.40 மணியளவில் பெற்றோர் பள்ளிக்கு சென்றபோது, மாணவி சுயநினைவின்றி இருந்ததால் உடனடியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியின் உடலை பெற்று வீட்டிற்கு சென்றனர். ஜூன் 11ஆம் தேதி மாலை நல்லடக்கம் நடைபெற்றது. பின்னர், மாணவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அலட்சியமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு காரணமான அலட்சியத்தை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி.. பொதுமக்கள் ஆச்சரியம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com