Mango pulp unit for Vellore : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணி நூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Mango pulp unit for Vellore : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணி நூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published on: June 13, 2026 at 6:25 pm
Updated on: June 13, 2026 at 6:31 pm
வேலூர், ஜூன் 13, 2026: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் லீலா அலக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, பள்ளிக்கல்வி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட 11 துறைகளின் சார்பில் மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் விஜய் பாலாஜி, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொய்வின்றி நடத்தவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார். மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் வகையில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர், வேலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மேலும், ஒடுகத்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய், கொய்யா போன்ற விளைப்பொருட்களை சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம், சாலை வசதிகள், குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை தேவைகள் மேம்படுத்தப்படும். மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில்துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க : த.வெ.க.வில் விஜயதரணி? தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com