தமிழ்நாட்டில் 3 லட்சம் என்ஜினீயரிங் விண்ணப்பங்கள்.. தரவரிசை வெளியீடு எப்போது?

Tamil Nadu Engineering admissions: தமிழ்நாட்டில் 2026 ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளன.

Published on: June 8, 2026 at 2:31 pm

சென்னை, ஜுன் 8 2026: தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) பதிவு முடிவடைந்த நிலையில், மொத்தம் 3,01,519 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமான எண்ணிக்கையாகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 29 அன்று வெளியிடப்படும் என்றும் கல்தாலோசனை (counselling) ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 443-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 585 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 2 லட்சத்து 20 ஆயிரத்து 841 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்ப எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

பதிவு விவரங்கள்

3,02,373 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2,45,220 பேர் பதிவு கட்டணத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். ஆன்லைன் பதிவு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூன் 5ஆம் தேதி நிறைவடைந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 முதல் தொடங்கும்.

தரவரிசை வெளியீடு

தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 29, 2026.
ஆலோசனை : ஜூலை இரண்டாம் வாரம் (AICTE ஒப்புதல் கிடைத்த பின்).
கல்லூரி தொடக்கம்: செப்டம்பர் 2026-இல் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளதால், முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பொறியியல் சேர்க்கைக்கான பதிவுகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக (DoTE) அதிகாரிகள் கூறுகையில், கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறுமானால், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான 2026-27 கல்வியாண்டு செப்டம்பர் 2026 முதல் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு NEET தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, மருத்துவம் படிக்க விரும்பிய பல மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு திரும்பியுள்ளதால், பொறியியல் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.. ராஜ் மோகன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com