Tiruvallur court verdict : 40 வயது பெண்ணை கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் ஐந்து பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
Tiruvallur court verdict : 40 வயது பெண்ணை கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் ஐந்து பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Published on: June 8, 2026 at 1:46 pm
சென்னை, ஜுன் 8 2026: சென்னை தாம்பரம்–மதுரவாயல் புறவழிச்சாலைக்கு அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு 40 வயது பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திருவள்ளூர் நீதிமன்றம் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி போரூர் அருகே தேநீர் கடை நடத்தி வந்த பெண் ஒருவர், இரவு சுமார் 11 மணியளவில் கடையை மூடிவிட்டு குடும்ப நண்பரான வாடகை கார் ஓட்டுநருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புறவழிச்சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெள்ளியார் அகரம் பகுதியில் ஒருவர் வழிமறித்துள்ளார். கார் நின்றதும் மேலும் 5 பேர் அங்கு உடனடியாக வந்து, ஓட்டுநர் மற்றும் பெண்ணை தாக்கி வாகனத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிய கும்பல், சிறிது தூரம் காரை ஓட்டிச் சென்று ஓட்டுநரை கீழே தள்ளிவிட்டு, பெண்ணை தனிமையான இடத்திற்கு கடத்திச் சென்றது. அங்கு பெண் அணிந்திருந்த எட்டு சவரன் நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். சம்பவம் தொடர்பாக எஸ். சாந்தோஷ் (21), வி. சூர்யா (21), ஏ. தினேஷ் (28), சி. கருப்பையா (27), எஸ். கணேஷ் (19), எஸ். சுபாஷ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையை நிறைவு செய்த எஸ்.ஆர்.எம்.சி. போலீசார் இறுதி அறிக்கையை திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.சனிக்கிழமை வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அனைத்து குற்றவாளிகளும் குற்றம் செய்தவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளை தண்டனைக்குட்படுத்தியதில், ஆவடி நகர போலீஸ் உயர் அதிகாரிகள், எஸ்.ஆர்.எம்.சி. போலீஸ் குழுவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சேலத்தில் பரபரப்பு.. டாஸ்மாக் கடை மீது பெட்ரோம் பாம் வீச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com