கேரள போறீங்களா? கடும் மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்

Kerala on Heavy Rain Alert: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on: June 8, 2026 at 11:51 am

Updated on: June 8, 2026 at 11:52 am

திருவனந்தபுரம், ஜுன் 8 2026: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 11 முதல் 20 செ.மீ. வரை மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம், கொல்லம், பாத்தனம்திட்டா, அலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு 6 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கேரள கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்தை எட்டக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மூன்று மணி நேர ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தளங்கள்

கனமழை முன்னறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கனமழை நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அருவிகள், நீர்நிலைகள் மற்றும் மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டாமெனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடு

நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தினால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகள் மற்றும் அணைகளின் கீழ்ப்பகுதிகளில் வசிப்போரும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அவசர உதவிக்காக 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா உதவி எண்களை மக்கள் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com